'எல்லாப் புகழும் அவர் ஒருவருக்கே'!.. 'என்னோட பலம் என்னனு... எனக்கே சொன்னவர் அவர் தான்'!.. மேட்ச்சையே தலைகீழாக மாற்றிய ரோகித்தின் 'மந்திரம்'!.. வாவ்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதன் பின்னணியில் ரோகித் சர்மாவின் மந்திரம் உள்ளதாக ராகுல் சஹார் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
153 என்ற இலக்கை கூட கொல்கத்தா அணியால் எடுக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் மும்பை அணி ஸ்பின்னர் ராகுல் சஹார். முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா (57), சுப்மன் கில் (33) ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்து மும்பை அணிக்கு பிரஷர் கொடுத்தனர். அவர்கள் 8.5 ஓவர்களில் 72 ரன்களை சேர்த்தனர். இதனால் கொல்கத்தா அணி சுலபமாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்பின்னர் அதனை மாற்றி அமைத்தார். தொடக்க வீரர்கள் இருவரையும் அவர் அடுத்தடுத்து வெளியேற்றினார். அதற்கு அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் மோர்கனையும் அவர் சொற்ப ரன்களுடன் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
இது ஆட்டத்தின் போக்கையே மாற்றி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 4 ஓவர்கள் வீசிய ராகுல் சஹார் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.
இந்நிலையில், ரோகித் சர்மா தான் தனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ராகுல் சஹார், ரோகித் சர்மா என்னிடம், நீ சிறப்பாக பவுலிங் செய்கிறாய்; நம்பிக்கையுடன் அதனை செய்; வலைப்பயிற்சியில் ஒரு சில நேரங்களில் என்னாலேயே நீ வீசும் பந்தை கணிக்க முடியவில்லை. எனவே, எதிரணிக்கும் அது ஒரு பிரச்னையாக இருக்கும். அதனை மனதில் வைத்துக்கொள். சிறப்பாக பந்துவீசு எனக்கூறியதாக தெரிவித்தார்.
இதுபோன்ற இக்கட்டான போட்டிகளில் யாரேனும் ஒருவர் ஆட்டத்தின் திசையை மாற்றுபவர் என்றால் அது ஸ்பின்னராக தான் இருக்க முடியும். அதை நான் நம்புகிறேன். நான் வலைப்பயிற்சியில் டாப் ப்ளேயர்களுக்கு பந்துவீசுகிறேன். எனவே, அதனால் எனக்கு இதுபோன்ற போட்டியில் எந்த பிரஷரும் இருக்காது. இந்த போட்டியிலும் நான் அதனை உணரவில்லை.