'அவர டார்ச்சர் பண்ண முடியாது!.. நடக்குறது நடக்கட்டும்!.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ'!?.. பயங்கர நெருக்கடியில் ராஜஸ்தான் அணி!.. என்ன சிக்கல்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Apr 12, 2021 08:49 PM

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார சங்ககாரா குறிப்பிட்டுள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாததால் ராஜஸ்தான் அணிக்கு ஏற்படும் இழப்புகள் என்ன?  

ipl rajasthan royals jofra archer not be rushed sangakkara

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்றைய தினம் மோதகின்றன. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. அவருக்கு வலது கையில் செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை காரணமாக அவர் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் எற்பட்ட காயம் காரணமாக அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்துவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மீன் தொட்டியை சுத்தம் செய்தபோது கையில் க்ளாஸ் துகள்கள் கீறி காயமானதையடுத்து, அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த துகள்கள் நீக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், அவர் விரைவில் அணியில் இணைய வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நெருக்கடி அளிக்காது என்று அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார். எனினும், தொடக்க போட்டிகளில் அவர் அணியில் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

மேலும், ஆர்ச்சர் தனது பிட்னசை நிரூபித்து கூடியவிரைவில் அணியில் இணைவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே வேலையில், அவர் ஐபிஎல்லின் சில போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்றும் சங்ககாரா கூறியயுள்ளார். முன்னதாக அவரது இருப்பை வைத்தே அணியின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லுக்காக மட்டுமின்றி அவரது சர்வதேச ஒப்பந்தங்களுக்காக அவர் கூடிய விரைவில் குணமடைவது அவசியம் என்றும் சங்ககாரா தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பௌலராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ipl rajasthan royals jofra archer not be rushed sangakkara | Sports News.