"அவர கேப்டன்னு சொல்லாதீங்க!... கொஞ்சம் கூட தகுதி இல்ல!".. சீனியர் வீரரை... நாறு நாறாக கிழித்தெறிந்த சேவாக்!.. ப்பா ஏன் இவ்வளவு கோவம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியைத் தழுவியது.

முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. டெல்லி போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான சூழல் இருக்கும் பிட்ச்சில் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்த போதும் அந்த அணி குறைவான ஸ்கோரே அடித்தது.
இதற்கு காரணம் டேவிட் வார்னர் நிறைய பந்துகளை விரயம் ஆக்கியது. 55 பந்துகளை சந்தித்தா வார்னர் வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், ஆடிய சென்னை அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதுகுறித்து பேசியுள்ள சேவாக், ஐதராபாத் அணியின் வார்னர் - மணிஷ் பாண்டே பெரிய பார்ட்னர்ஷிப் கொடுத்து 171 ரன்கள் குவித்தனர். சென்னை போன்ற ஆடுகளத்தில் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், டெல்லி பேட்டிங்கிற்கு மிகவும் உதவக்கூடிய பிட்ச் ஆகும். ஆட்டத்தின் கடைசியில் விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு பேட்டிங் செய்ய எந்த சிரமமும் இல்லாத போது ஓப்பனர்கள் அதிரடி காட்டவில்லை.
டேவிட் வார்னரின் எண்ண ஓட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அவரின் ஆட்ட முறையே சரியில்லை. அவர் எந்தவித பதற்றமும் இன்றி ஆடியிருக்க வேண்டும். ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது.
மணிஷ் பாண்டே 36 பந்துகளில் அரைசதம் அடிக்க முயன்றால், வார்னர் அதிகப்படியான ரன்களை குவித்திருக்க வேண்டும். அவருக்கு பின்னால் வில்லியம்சன், கேதர் ஜாதவ், விஜய் சங்கர் உள்ளனர் என்பது அவருக்கு தெரியும். எனவே, ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்.
கேப்டனாக டேவிட் வார்னருக்கு நான் அதிக ரேட்டிங் கொடுக்க மாட்டேன். சென்னை அணியின் ஓப்பனிங் பேட்டிங்கை உடைக்க சில விஷயங்களை வார்னர் செய்திருக்கலாம். ஆனால், அவர் செய்யவில்லை. இதுவே வில்லியம்சன் கேப்டனாக இருந்திருந்தால் வேறு ஆட்டத்தை பார்த்திருக்கலாம். ஏனெனில், விக்கெட் எடுத்தால் தான் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்பது அவருக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
