VIDEO: ‘கேப்டனே இப்படி பண்ணா எப்படிங்க’!.. லட்டு மாதிரி கிடச்ச வாய்ப்பை, இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் கேட்சை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி இன்று (29.04.2021) டெல்லியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜாஸ் பட்லர் 41 ரன்களும், சிவம் தூபே 35 ரன்களும், ஜெய்ஸ்வால் 32 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி, 18.3 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டி காக் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
— pant shirt fc (@pant_fc) April 29, 2021
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 2-வது ஓவரை ராஜஸ்தான் அணியின் உனத்கட் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டின் நுனியில் பட்டு கீப்பருக்கு சென்றது. ஆனால் அதை ராஜஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் தவறவிட்டார். இதனால் உனத்கட் அதிருப்தி அடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
