VIDEO: ‘ஃப்ரண்ட்டுன்னு கூட பாக்காம இப்டியா பொளக்குறது’!.. ‘இரக்கம் இல்லையா உனக்கு’.. போட்டி முடிந்தவுடன் அன்பாக அடித்த சிவம் மாவி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ப்ரீத்வி ஷாவுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் சிவம் மாவி அன்பாக சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 45 ரன்களும் சுப்மன் கில் 43 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து விளையாடிய டெல்லி அணி, 16.3 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரர்களான, ப்ரீத்வி ஷா 82 ரன்களும், ஷிகர் தவான் 46 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இப்போட்டி முடிந்த பின், டெல்லி வீரர் ப்ரீத்வி ஷாவை கொல்கத்தா வீரர் சிவம் மாவி அன்பாக கழுத்தை பிடித்து சண்டையிட்டார். இதற்கு காரணம், சிவம் மாவி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில், ப்ரீத்வி ஷா 6 பவுண்டரிகள் விளாசியிருப்பார். கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்தது இதுதான் முதல்முறை.
Once the match is completed, friendship takes over. The beauty of #VIVOIPL🤗@PrithviShaw | @ShivamMavi23 https://t.co/GDR4bTRtlQ #DCvKKR pic.twitter.com/CW6mRYF8hs
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
போட்டி முடிந்த பின் பேசிய ப்ரீத்வி ஷா, ‘உண்மையாக சொல்ல வேண்டுமனால், எதையும் நான் யோசிக்கவில்லை. நானும் சிவம் மாவியும் நான்கு, ஐந்து ஆண்டுகாளாக ஒன்றாக விளையாடி வருகிறோம். எனக்கு எப்படி பந்துவீச வேண்டுமென அவனுக்கு நன்றாக தெரியும். ஷார்ட் பால்தான் வீசுவான் என்று தயாரக இருந்தேன். ஆனால் அவன் ஷார்ட் பாலே வீசவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் கேப்டன் ப்ரீத்வி ஷா தலைமையிலான இந்திய அணியில் சிவம் மாவி விளையாடியுள்ளார். அதனால் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.