'எல்லாமே நல்லா தான் இருந்துச்சு...' எங்க 'பிரச்சனை' இருக்குன்னு நான் நினைக்குறேன்னா... 'வருத்தப்பட்ட மோர்கன்...' - இப்படி புலம்ப விட்டாங்களே...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த வருட ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 154 ரன் எடுத்தனர். கடைசி வரைக்கும் ரன்கள் சேராமல் மிகப்பொறுமையாக விளையாடி வந்தனர்.
சில விக்கெட்டுகள் போன பின்பாக ரஸல் களம் இறங்கினார். அவருக்கு ஸ்பின் பந்து போடா கூடாது என்பதை முடிந்த அளவிற்கு அவருக்கு சவாலான பந்துகளை தேர்வு செய்தே வீசினர். ஆனாலும் அதிரடியாக விளையாடினார். சில பந்துகளில் ஆந்த்ரே ரசல் 45 ரன்விளாசினார்.
டெல்லி அணியின் சார்பில் அக்சர் படேல், லலித் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சற்று எளிதான டார்கெட்டை நோக்கி விளையாடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் நல்ல அடித்தளம் அமைத்தனர். குறிப்பாக பிரித்விஷா பந்தை பிரித்து மேய்ந்தார்.
ஷிவம் மாவி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் பிரித்விஷா 6 பவுண்டரி அடித்து அசத்தினார். அவர் 41 பந்தில் மொத்தம் 82 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 3 சிக்சர் என காட்டடி அடித்தார். டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் மார்கன் பேசுகையில்,
இது எங்களுக்கு ஏமாற்றம் தான். நாங்கள் மெதுவாக ஆடினோம். ஒரு ஓவரில் விக்கெட்டுகளை இழந்தோம். இறுதி கட்டத்தில் ஆந்த்ரே ரசல் தான் 150 ரன்னுக்கு கொண்டு சென்றார். ஆனால் நாங்கள் மீண்டும் பந்து வீச்சில் தீவிரம் காட்டவில்லை.
இந்த தொடரில் இதுவரை ஒரு ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுவதில் தொடர்ச்சியாக போராட்டமாகவே உள்ளது. முன்னோக்கி நகரும் போது, அணியில் பெரிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம். நீங்கள் நேர்மையாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
எங்கள் அணியில் நல்ல திறமைகள் உள்ளன. ஆனால் திறமைகள் மட்டும் உங்களை முன்னோக்கி நகர்த்தாது. நீங்கள் திறமைகளை செயல்திறனாக மாற்ற வேண்டும். நாங்கள் அதை செய்யவில்லை. அதிலிருந்து மீண்டு வருவோம் என்று மீண்டும் நம்பிக்கையோடு உள்ளேன்.
இவ்வாறு மோர்கன் தெரிவித்துள்ளார்

மற்ற செய்திகள்
