'டீம் கேப்டன் நீங்களே இப்படி பண்ணலாமா?.. யாருக்காக விளையாடுறீங்க?.. அத மொதல்ல சொல்லுங்க'!.. பஞ்சாப் அணியில் கிளம்பிய பூதம்!.. வாய் திறப்பாரா ராகுல்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணியின் கேப்டன் கே. எல் ராகுல் ஆடும் விதம் அந்த அணியின் நிர்வாகத்தை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது. இதன் பின் இறங்கிய டெல்லி வெறும் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
டெல்லி அணியில் தவான் அதிரடியாக ஆடி 92 ரன்கள் எடுத்தார். இதில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர் அடக்கம். நேற்று பஞ்சாப் அணியில் கே. எல் ராகுல் 51 பந்துகள் பிடித்து 61 ரன்கள் எடுத்தார். 2 சிக்ஸர், 7 பவுண்டரி இதில் அடக்கம்.
நேற்று கே. எல் ராகுல் நன்றாக ஆடி இருந்தாலும், அவர் மீது அணி நிர்வாகம் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. முக்கியமாக கே. எல் ராகுலின் ஸ்டிரைக் ரேட் பார்த்து பஞ்சாப் அணி கோபத்தில் உள்ளது.
கே. எல் ராகுலின் தவறே அவரின் ஸ்டிரைக் ரேட்தான். ஒவ்வொரு போட்டியிலும் ராகுல் அரைசதம் அடித்தாலும் கூட இவரின் ஸ்டிரைக் ரேட் டெஸ்ட் போட்டிகளை விட மிக மோசமாக இருக்கிறது. 110-120 ஸ்டிரைக் ரேட் வைத்து ஆடுவதே ராகுல் செய்யும் தவறு. மிகவும் நிதானமாக ஆடி 50 ரன்களை சேர்ப்பதை வழக்கமாக வைத்து உள்ளார்.
ஆரஞ்ச் கேப்பிற்காக இவர் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதான் பஞ்சாப் அணிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கேப்டனாக இருக்கும் அவர், அணிக்காக ஆடாமல், தனிப்பட்ட வகையில் தன்னுடைய ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று ராகுல் ஆடுவதை அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை.
கடந்த வருடமும் இதேபோல்தான் ராகுல் ஆடினார். தனிப்பட்ட வகையில் ஆரஞ்ச் கேப் வாங்க வேண்டும் என்று கே. எல் ராகுல் ஆடினார். இதனால்தான் பஞ்சாப் அணி கடந்த சீசனில் தோல்வி அடைந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகிறது. இந்த நிலையில், இந்த வருடமும் ராகுல் இதேபோல் ஆடுவது பஞ்சாப் அணி நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.