'இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா'?.. ஜடேஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி!.. பிசிசிஐ முடிவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்பு!.. என்ன நடக்கிறது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆல்ரவுண்டர் ஜடேஜா விஷயத்தில் பிசிசிஐ எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வீரர்களின் ஒப்பந்தம் மற்றும் ஊதிய விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில் ஜடேஜாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரிவு ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரருக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவிற்கு ரூ.5 கோடியும், பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு தலா ரூ.3 மற்றும் ரூ.4 கோடியும் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பரீத் பும்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏ+ பிரிவில் தேர்வாகும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 போன்ற மூன்று பிரிவுகளிலும் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்பதுதான் விதியாகும். ஜடேஜா கடந்த ஆண்டில் மூன்றுவகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம்பெற்று வந்தார். இங்கிலாந்து தொடரில் மட்டும் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்நிலையில், இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், "ஜடேஜாவுக்கு ஏ+ பிரிவில் இடம் வழங்காதது அவமானம. அவர் விராட் கோலியுடன் ஏ+ பிரிவில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அவரைப் போலவே இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியுன் முன்னாள் தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், "ஜடேஜா ஏ+ பிரிவுக்கு தகுதியானவர். அவரின் பெயர் அந்த பிரிவில் இடம் பெறாமல் இருக்க ஒரு காரணமும் எனக்கு தெரியவில்லை" என கூறியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். அதேபோல, டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அவர் ஏ+ பிரிவில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.