'சீனியர் ப்ளேயர்னு டீம்ல எடுத்ததுக்கு... உன்னால என்ன பண்ண முடியுமோ 'அத' பண்ணிட்ட'!.. ஒரே ஒரு மிஸ்டேக்!.. பெரிய தலை வலி!.. செம்ம கடுப்பில் ரிஷப் பண்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் செய்த சிறிய தவறு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர்.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால், கே.எல்.ஜோடி முதல் ஓவர் முதலே டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக ஆட்டத்தில் மெரிவாலா வீசிய 2வது ஓவரில் மட்டும் 20 ரன்களை விளாசினர்.
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 5 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. அதே போல் பவர் ப்ளேவின் முடிவில் 59 ரன்கள் சேர்ந்தது. இவர்களை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர்.
இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பால் டெல்லி அணிக்கு தலைவலி ஏற்பட்டதற்கு ஸ்மித் செய்த சிறிய தவறே காரணம்.
ஆட்டத்தின் போது மெரிவாலா போட்ட 2வது ஓவரின் 2வது பந்தை கே.எல்.ராகுல் தூக்கி அடிக்க முற்பட்டார். அப்போது வலையத்திற்கு நின்றிருந்த ஸ்மித் தன்னிடம் வந்த கேட்சை தவறவிட்டார். அவர் செய்த சிறிய தவறினால் இந்த பார்ட்னர்ஷிப் மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
அதே போல ஆட்டத்தின் 12வது ஓவரில் ஆவேஷ் காண் போட்ட பந்தை ராகுல் தூக்கி அடிக்க முயன்றார் அப்போது ப்ரித்வி ஷா கேட்சை தவறவிட்டார். ஆனால் அதற்கு அடுத்த ஓவரிலேயே டெல்லி அணி நிம்மதி பெருமூச்சு விட்டது.
அதிரடியாக ஆடிவந்த மயங்க் அகர்வால், மெரிவாலா வீசிய பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.