இன்னைக்கு தரமான ‘என்ட்ரி’ இருக்கும் போலயே.. சிஎஸ்கே வெளியிட்ட போட்டோ.. அப்போ அவருக்கு ரெஸ்ட்டா?.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடரில், இதுவரை 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்றைய 12-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. அதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ராபின் உத்தப்பா விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், சிஎஸ்கே விளையாடிய இரண்டு போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டின் மொத்த ரன்கள் 10 தான். மேலும் வலைப்பயிற்சியிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட், இன் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள சற்று சிரமப்படுகிறார். ராஜஸ்தான் அணியில் இன் ஸ்விங் பந்துகளை சிறப்பாக வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் ருதுராஜ் கெய்வாட்டுக்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Strike and Pose! 📸#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/9FkiBzCKTf
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 18, 2021
இதை நிரூபிக்கும் விதமாக ராபின் உத்தப்பா வலைப்பயிற்சி செய்யும் போட்டோவை சிஎஸ்கே அணி, தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதனால் இன்று ராபின் உத்தப்பா விளையாடுவார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராபின் உத்தப்பா தனது மகன், சிஎஸ்கே ஜெர்சி அணிந்து பேட்டிங் செய்வது போன்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ராபின் உத்தப்பா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அவரை ரூ.3 கோடிக்கு சென்னை அணி எடுத்தது. இவர் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
