VIDEO: 'ரொம்ப பசிக்குது...' 'ஆனா சாப்பிட போறதில்ல...' என்ன காரணம்...? 'இதான் எங்களுக்கு ஃபர்ஸ்ட் டைம்...' - SRH வீரர் வெளியிட்ட வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரமலான் மாதத்தில் ஹைதராபாத் அணியின் பல வீரர்கள் நோன்பு கடைபிடித்து, தங்கள் கிரிக்கெட் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து 2021-ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல அணிகள் தங்கள் வெற்றியை நிரூபித்து வந்தாலும் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை தழுவி வருகிறது.
இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் நன்றாக ஆடியும், வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட ஹைதராபாத் அணி வரிசையாக தோல்வி அடைந்துவிட்டது.
தற்போது ரமலான் மாதம் என்பதால் ஹைதராபாத் அணியின் பெரும்பாலான வீரர்கள், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நபி, கலீல் அகமது போன்ற வீரர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். போட்டி இல்லாத நாட்களில் மட்டுமே நோன்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
சென்னை வெயிலில் இவர்கள் சாப்பிடாமல் பயிற்சி மேற்கொள்வது கஷ்டம் என்றாலும் கூட தொடர்ந்து நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.
இதில் உற்சாகம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், மூத்த வீரர் கேன் வில்லியம்சனும் தற்போது நோன்பு இருந்து வருகின்றனர்.
மேலும், தற்போது நோன்பு குறித்து ரஷீத் கான் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரமலான் நோன்பு முதன் முதலாக எடுக்கும் வார்னரும், கேன் வில்லியம்சனும் நோன்பு இருப்பதில் உள்ள சிரமங்களை பகிர்ந்து உள்ளனர்.
kane williamson and david warner were fasting today 🥺😭 pic.twitter.com/FP0RcawA1T
— meme (@bitchyOrat) April 18, 2021