'அவரு ப்ரீ பெயிட் சிம் கார்ட் மாதிரி!.. இவங்க போஸ்ட் பெயிட் சிம் கார்ட் மாதிரி'!.. இந்திய அணி வீரர்களை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்!.. ஏன் இப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Apr 17, 2021 02:24 AM

ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் குறித்தும், அவர் இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு பெறாதது குறித்தும் முன்னாள் வீரர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ipl sanju samson like pre paid sim card says pragyan ojha

இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வருகிறார். இவரின் தலைமையில் 2 போட்டிகளை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தான் அணி ஒன்றில் தோல்வி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 2வது லீக் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.  

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

சிறப்பாக ஆடிய மில்லர் 62 ரன்களும், மோரிஸ் 36 ரன்களும் எடுத்தனர்.  148 என்ற குறைந்த இலக்கை எதிர்க்கொண்ட போதும் ராஜஸ்தான் அணியில் டாப் ஆர்டர் அடுத்தடுத்து சரிந்து அதிர்ச்சியளித்தது. குறிப்பாக கேப்டான இருந்து பொறுப்பாக ஆட வேண்டிய சஞ்சு சாம்சன், 4 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

முதல் போட்டியில் சதம் அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற சாம்சன், 2வது போட்டியில் மோசமாக அவுட்டாகி வெளியேறினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரக்யன் ஓஜா, சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ -பெயிட் (Pre paid) சிம் கார்ட்டை போல. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது சிறப்பாக செயல்படுகிறார்.

அவர் கடந்த 2015ம் ஆண்டு சிம்பாவேவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் வரும் போது இஷான் கிஷான், ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லை. எனினும், தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால் வெறும் 6-7 போட்டிகளிலேயே வாய்ப்பு பெற்றார். 

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் போஸ்ட் பெயிட் (Post paid) சிம் கார்டை போன்றவர்கள். அவர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும், சிறிது காலம் இந்திய அணியில் தாக்குப்பிடித்து, மீண்டும் ஃபார்முக்கு வருவார்கள்.

ஆனால் அணியில் சில இளம் வீரர்களும் ப்ரீ - பெயிட் சிம்கார்டை போன்று உள்ளனர். அவர்கள் போஸ்ட் பெயிட் கார்டாக மாற நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லையெனில் சிம் செயலழிந்து போவது போல அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ipl sanju samson like pre paid sim card says pragyan ojha | Sports News.