ஒரே ஒரு தமிழன்!.. பஞ்சாப் அணிக்காக... ஒட்டுமொத்த சிஎஸ்கேவையும் திணறடிச்சு... தனியாளாக கெத்து காட்டியது எப்படி?.. தெறி பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஒரு தமிழக வீரர் மட்டுமே பஞ்சாப் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.
பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளது. பவர் பிளேவிலேயே சிஎஸ்கே அணி 3 விக்கெட் எடுத்து பஞ்சாப்பை காலி செய்தது. 4 ஓவர்கள் வீசி சாகர் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தி உள்ளார்.
பஞ்சாப் அணியின் டாப் ஆர்டரை சிஎஸ்கே பவுலர்கள் திட்டமிட்டு சரித்தனர். பஞ்சாப் அணியில் ஓப்பனிங் இறங்கிய மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய ராகுல், ஜடேஜா மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர், கெயில் 10 ரன்கள், தீபக் ஹூடா 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். நிக்கோலஸ் பூரான் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடினார். அவசரமாக ஆடி அவுட் ஆகாமல், முதல் 10 பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். ஆனால் அதற்கு பின் ஷாருக்கான் வேகம் எடுக்க தொடங்கினார்.
10 பந்துகளுக்குப் பின் அதிரடி காட்டிய ஷாருக்கான் தனது பொறுப்பை உணர்ந்து தேவையான பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து வெளுத்து அசத்தினார். சக தமிழக வீரர் முருகன் அஸ்வினுடன் பிளான் போட்டு ஷாருக்கான் வெளுத்து வாங்கினார்.
மற்ற வீரர்களின் விக்கெட்டை எளிதாக எடுத்த நிலையில் ஷாருக்கான் விக்கெட்டை மட்டும் எடுக்க முடியாமல் சிஎஸ்கே திணறியது. இவருக்கு எப்படி பவுலிங் போட்டாலும் விக்கெட் எடுக்க முடியாமல் சிஎஸ்கே பவுலர்கள் திண்டாடினர். மற்ற வீரர்கள் எல்லோரும் அவுட் ஆன நிலையில் ஷாருக்கான் மட்டும் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்தார்.
36 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 47 ரன்கள் எடுத்து ஷாருக்கான் அவுட் ஆனார். ஷாருக்கான் இதன் மூலம் தன்னை சிறந்த பினிஷர் என்று நிரூபித்துள்ளார். சையது முஷ்டாக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ஷாருக்கானை பஞ்சாப் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.