'படு பயங்கர ஸ்கெட்ச்!.. பின்ன, பவர் ப்ளேல 4 விக்கெட்னா சும்மாவா'!?. பஞ்சாப் கிங்ஸ் டாப் ஆர்டருக்கு வேட்டு வைத்த... சாஹரின் வியூகம் 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பவுலர் தீபக் சாகர் 4 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பஞ்சாப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதல் பவுலிங் செய்ய முடிவு செய்தது. பிட்ச் தொடக்கத்தில் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும், போக போக பனி வந்துவிடும் என்பதால் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.
இந்த போட்டியில், சிஎஸ்கே அணி எந்த மாற்றமும் இல்லாமல், அதே பழைய அணியோடு களமிறங்கியது. கடந்த போட்டியில் சரியாக ஆடாத சாகர் மீது இந்த போட்டியில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.
இதற்கு முந்தைய போட்டியில் சாகர் அதிகமாக லெக் சைடில் வீசினார். அதேபோல் பெரிதாக ஆப் சைடில் வீசவில்லை. இன்னொரு பக்கம் சாகர் பெரிதாக ஸ்விங் செய்யவில்லை. மேலும் அவர் பெரிதாக பவுன்சரும் செய்யவில்லை. இதனால் சாகருக்கு இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கடுமையான பிரஷர் இருந்தது.
இந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சாகர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தனது முதல் ஓவரிலேயே சிறப்பான லென்தில் வீசினார். ஆப் சைடில் தொடர்ந்து இவர் பவுலிங் செய்து பஞ்சாப் டாப் ஆர்டர் வீரர்களுக்கு பிரஷர் கொடுத்தார். ஆப் சைடில் ஸ்விங் ஆகும் பந்தை பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் அடிக்க முடியாது.
ஒரே ஓவரில் ஆப் சைடில் வீசியது மட்டுமின்றி பவுன்சர்களையும் வீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு டஃப் கொடுத்தார். முதல் ஓவரிலேயே பிட்சை பயன்படுத்தி சாகர் பந்தை முடிந்த அளவு ஸ்விங் செய்தார். கடந்த போட்டியிலும், முந்தைய வருடமும் சாகரிடம் இந்த ஸ்விங் மேஜிக்தான் மிஸ் ஆனது.
சாகர் இன்று முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் பவர் பிளே முடிந்ததும் மீண்டும், சாகருக்கு தோனி ஓவர் கொடுத்தார். இவர் தனது கடைசி ஓவரை 6வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் சாகர் 4வது விக்கெட்டையும் எடுத்தார். கடந்த போட்டியில் இவர் மீது வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களுக்கு எல்லாம் இந்த போட்டியில் தன்னுடைய தரமான பந்துவீச்சின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.