'யோவ் நாட்டாமை... என்னயா இது?.. போங்கு ஆட்டம் ஆடுறீங்களா'?.. மேட்ச்சின் நடுவே அம்பயர்களிடம்... திடீரென மல்லுக்கட்டிய ராகுல்!.. பூதாகரமாகும் சிக்கல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே எல் ராகுல் செய்த ஒரு சம்பவம் அனைத்து அணிகளின் கேப்டன்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. பஞ்சாப் நேற்று சிறப்பாக ஆடி இருந்தாலும், டெல்லி ஓப்பனர்களின் அதிரடி காரணமாக பஞ்சாப் வீழ்ந்தது.
நேற்று டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்தது. பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு நேற்று வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணியின் பவுலர்கள் மிக மோசமாக சொதப்பினார்கள். இதனால் டெல்லி வெறும் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் நேற்று கேப்டனாக ராகுல் நிறைய தவறுகளை செய்தார். இவரின் ஓவர் ரொட்டேஷன் சரியில்லை. இவர் ஃபீல்டிங் நிற்க வைத்த விதமும் சரியாக அமையவில்லை. இதுவே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதைவிட முக்கியமாக நேற்று ராகுல் பாஸ்ட் பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை. மும்பை பிட்ச் பாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமான பிட்ச். எனினும், ராகுல் இவர்களுக்கு சரியான லைன் மற்றும் லென்தில் போடும்படி ஊக்குவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், நேற்று அதிகம் பனி பெய்ததால், பந்து ஈரமானதும் கூட அந்த அணிக்கு எதிராக சென்றது. பனி பெய்ததால் பாஸ்ட் பவுலர்களின் ஓவரில் அதிக ரன்கள் செல்கிறது என்று நேற்று ராகுல் நடுவரிடம் கூட புகார் வைத்தார். பனி காரணமாக பிட்ச் ஈரமாக இருக்கிறது. பந்து நழுவி நழுவி செல்கிறது. இதனால் பந்தை மாற்றுங்கள் என்று ராகுல் நடுவரிடம் கோரிக்கை வைத்தார்.
இரண்டு முறை நடுவரிடம் ராகுல் இப்படி கோரிக்கை வைத்தார். ஆனால் நடுவர்கள் ராகுலின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக இதற்கெல்லாம் ரூல்சில் இடமில்லை, புதிய பந்தை கொடுக்க முடியாது என்று கூறி கே. எல் ராகுலுக்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு போட்டியில், டெல்லி அணி தோல்வியைத் தழுவியது. அப்போது பேசிய அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் குறிப்பிட்டது போன்றே தோல்விக்கு பனியை ஒரு காரணமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
