'ஒரு ஆல் ரவுண்டர் எப்படி இருக்கணும்!.. இவரு ஏன் இப்படி இருக்காரு?.. பொறுப்பா நடத்துக்குங்க தம்பி'!.. மும்பை அணி வீரரை... வெளுத்து வாங்கிய இர்ஃபான் பதான்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கிண்டலடித்துள்ளார்.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் ஐபில் கோப்பையை வென்று ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதில் ஹர்த்திக் பாண்டியாவின் செயல்பாடு பலருக்கும் அதிருப்தியையும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு ஹர்த்திக் பாண்டியாவின் மோசமான பேட்டிங்கும் காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளிலும் ஆடியுள்ள ஹர்திக் பாண்டியா, வெறும் 35 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். முதுகு வலி காரணமாகவும், பணிச்சுமை காரணமாகவும், அவர் இந்த தொடரில் பந்துவீசாமல் உள்ளார். ஆனால், பேட்டிங்கிலும் பெரியளவில் சோபிக்காமல் உள்ளார். குறிப்பாக நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார். இது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் ஈடுபடாமலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாமலும் இருப்பது, மும்பை அணிக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாண்டியாவின் மோசமான பேட்டிங்கிற்கு மைதானமும் காரணமாக பார்க்கப்படுகிறது. மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளும் சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த பிட்ச்சில் பேட்டிங்கிற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, 5 - 6 வது வீரராக களமிறங்கு பாண்டியா அதிக பிரஷரில் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவுட்டாகி வெளியேறுகிறார். எனவே, மும்பை அணி வேறு மைதானத்திற்கு செல்லும் போது அவரின் அதிரடியை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.