‘ரோஹித் பண்ண தப்பை அப்படியே செஞ்ச ஹர்திக்’!.. ஒரே ஓவரில் எல்லாமே ‘தலைகீழா’ மாறிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் அமித் மிஸ்ரா வீசி ஒரு ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டி இன்று (20.04.2021) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், டி காக்கும் களமிறங்கினர்.
இதில் டி காக் 1 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனை அடுத்து வந்த சூர்யகுமார் யாத்வுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் 30 பந்துகளில் 44 ரன்கள் (3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.
இந்த நிலையில் அமித் மிஸ்ரா வீசிய 9-வது ஓவரின் 4-வது பந்தில் சிக்சர் விளாச நினைத்து ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும், ரோஹித் ஷர்மா செய்த அதே தவறை செய்து, ஸ்மித்திடமே கேட்ச் அவுட்டானார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சென்றது டெல்லி அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜெயந்த் யாதவை (23 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். குறிப்பாக ஆல்ரவுண்டர் பொல்லார்டு 2 ரன்னில் வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மும்பை அணி எடுத்தது.
டெல்லி அணியைப் பொறுத்தவரை அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், மார்கஸ் ஸ்டோனிஸ், ரபாடா மற்றும் லலித் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.