![Michael Coffee house Michael Coffee house](http://www.behindwoods.com/tamil-movies/topbanners-photos/michael-coffee-house-photos-pictures-stills.jpg)
VIDEO: ரிஷப் பண்ட் 'அப்படி' சொன்ன உடனேயே... அஸ்வினோட முகமே மாறிடுச்சு...! 'போட்டியின் நடுவே நடந்த சம்பவம்...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியின் கேப்டனுக்கும், அஸ்வினுக்கும் இடையே ஒரு சிறிய தீப்பொறி உருவாகியுள்ளது.
![Controversy over Ashwin and Rishabh pant viral video Controversy over Ashwin and Rishabh pant viral video](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/controversy-over-ashwin-and-rishabh-pant-viral-video.jpg)
2021ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று (20-04-2021) 13-வது போட்டியாக ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதிக்கொண்டன.
முதலில் டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 20 ஓவர் முடிவில் 137 ரன்களை அடித்தது. இதில் ரோஹித் சர்மா 44 ரன்கள், டி- காக் 2 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள், இஷான் கிஷான் 26 ரன்கள் மற்றும் ஜெயந்த் யாதவ் 23 ரன்களை அடித்துள்ளனர்.
அதன்பின் டெல்லி அணி 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என களத்தில் இறங்கியது. 19.1 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
ஆனால் ஆட்டத்தின் நடுவே டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அதே அணியை சேர்ந்த அஸ்வினுக்கும் சில சலசலப்பு ஏற்பட்டது.
அதாவது, டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங் செய்யும்போது பந்துவீச்சாளர் அஸ்வின் இரண்டாவது ஓவரில் இறக்கப்பட்டார்.
அஸ்வின் வீசிய பந்தை ரோஹித் சர்மா எதிர்கொண்ட போது ஒரு பந்து LBW ஆக இருக்கும் என்று டெல்லி அணியை சேர்ந்த அஸ்வின் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சத்தம் போட்டனர். ஆனால் எப்போதும் போல நடுவரோ அதனை அவுட் இல்லை என்று சொன்னார்.
பந்து வீசிய அஸ்வினோ Review எடுக்கலாம் என ரிஷப் பண்டிடம் கேட்டார், ஆனால் அவர் அதற்கு இல்லை வேண்டாம் என்ற மாதிரி கூறியதால் அஸ்வின் முகம் சுழித்து கொண்டார்.
இந்த வீடியோ தான் தற்போது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது இடத்திலும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
— Aditya Das (@lodulalit001) April 20, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)