VIDEO: பாவங்க மனுசன்.. இப்டியொரு ‘அவுட்’-அ கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டாரு.. மரண ‘மாஸ்’ காட்டிய வார்னர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் அற்புதமான ரன் அவுட் செய்து அசத்தினார்.

டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தற்போது சேப்பாக்கம் மைதானம் சேஸிங் செய்வதற்கு எளிமையாக இருப்பதால் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த முடிவு எடுத்ததாக தெரிகிறது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்திலேயே கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ராகுல் வெளியேறினார். இதனை அடுத்து மயங்க் அகர்வாலும் (22 ரன்கள் அவுட்டாகினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 13 ரன்களில் ரஷித் கான் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இவர்களை தொடர்ந்து நிக்கோலஸ் பூரான் (0), தீபக் ஹூடா (13 ரன்கள்), ஹென்ரிக்ஸ் (14 ரன்கள்) என அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இதில் 7-வதாக களமிறங்கிய தமிழக வீரர் ஷாருக் கான், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் அடித்து கலீல் அகமது ஓவரில் அவுட்டாகினார். இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 19.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 121 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் 8-வது ஓவரை ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல், வலது பக்க கவர் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். ஆனால் டேவிட் வார்னர் பந்தை பிடித்துவிட்டார். அப்போது நான் ஸ்ட்ரைக்கில் இருந்த நிக்கோலஸ் பூரான் வேகமாக ஓடி வந்தார். ஆனால் அதற்குள் அவரை வார்னர் ரன் அவுட் செய்தார்.
— Cricsphere (@Cricsphere) April 21, 2021
களமிறங்கி முதல் பந்தை எதிர்கொள்வதற்குள் ரன் அவுட்டாகி நிக்கோலஸ் பூரான் வெளியேறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
