VIDEO: ஏய்..! ‘இந்த மாதிரி நேரத்துலயா இப்டி கோட்ட விடுவீங்க’.. உச்சக்கட்ட கோபத்தில் கத்திய மோரிஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு எதிரான போட்டியில் இளம்வீரர் சக்காரியா ராஜஸ்தான் வீரர் கிறிஸ் மோரிஸ் திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 12-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டு பிளசிஸ் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 10 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த களமிறங்கிய மொயின் அலி (26 ரன்கள்), டு பிளசிஸுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார்.
இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னா 18 ரன்களிலும், அம்பட்டி ராயுடு 27 ரன்களும் அவுட்டாகினர். இதனை அடுத்து ஜடேஜா 8 ரன்னிலும், கேப்டன் தோனி 18 ரன்களிலும் அவுட்டாக, 18 ஓவர்களில் 163 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்தது.
கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த சாம் கர்ரன் (6 பந்துகளில் 13 ரன்கள்) மற்றும் பிராவோ (8 பந்துகளில் 20 ரன்கள்) கூட்டணி சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சிஎஸ்கே குவித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் மட்டுமே 49 ரன்கள் அடித்தார். சென்னை அணியைப் பொறுத்தவரை மொயில் அலி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் சர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே பேட்டிங் செய்த போது ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் சேத்தன் சக்காரியை கிறிஸ் மோரிஸ் கடுமையாக திட்டினார். அப்போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் ஒருவர் கூட 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. ஆனாலும் ஸ்கோர் 170-ஐ தாண்டியது. அதற்கு காரணம் களமிறங்கிய ஒவ்வொரு வீரர்களும் சிக்சர், பவுண்டரி என விளாசிவிட்டு அவுட்டானதுதான். அதனால் கடைசி கட்டத்திலாவது ரன்களை கட்டுப்படுத்த ராஜஸ்தான் அணி முயன்றது.
— Aditya Das (@lodulalit001) April 19, 2021
அப்போது போட்டியின் 19-வது ஓவரை ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் வீசினார். அந்த ஓவரின் எதிர்கொண்ட பிராவோ சிலிப்பில் அடித்துவிட்டு ரன் ஓடினார். அங்கு பீல்டிங் செய்த இளம்வீரர் சேத்தன் சக்காரியா டைவ் அடித்து பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்தை நழுவி சென்றுவிட்டது. மேலும் பந்தை துரத்திச் சென்ற முஸ்தாபிசுர் ரஹ்மானும் பந்தை தடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த கிறிஸ் மோரிஸ் அவர்களை கடுமையாக திட்டினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் சென்றது குறிப்பிடத்தக்கது.