
'3 மேட்ச்லயும் செம்ம சொதப்பல்!.. எதுக்காக அவர ஓப்பனிங் இறக்குறீங்க'?.. கொதிக்கும் ரசிகர்கள்!.. ருத்துராஜ் குறித்து... மௌனம் கலைத்த சிஎஸ்கே!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கேவில் இளம் வீரருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் இளம் வீரர் ருத்துராஜ் கெயிக்வாட் சொதப்பலான ஆட்டத்தால் வெளியேறி பலரது கோபத்திற்கு உண்டாகியுள்ளார்.
சென்னை அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமான ருத்துராஜ் கெயிக்வாட் கடந்த சீசனில் முதலில் சில ஆட்டங்களில் சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் இந்த ஆண்டும் அவருக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓப்பனிங்கிற்கு அனுபவ வீரர் உத்தப்பா இருந்த போதும் ருத்துராஜ் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்து வருகிறது.
ஆனால், இந்த ஆண்டு சிஎஸ்கே நினைத்தது போன்று அவர் பெரியளவில் ஆடவில்லை. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளிலும் ருத்துராஜ் கெயிக்வாட் 5, 5, 10 என்ற சொற்ப ரன்களே அடித்துள்ளார். இவரின் மோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே ஆரம்பத்திலேயே தடுமாறுவதாகவும், இவரை அணியில் இருந்து நீக்கி விட்டு ஐபிஎல்-ல் மிகவும் அனுபவம் வாய்ந்த ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோபத்துடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், இளம்வீரரான ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங், ராபின் உத்தப்பா விளையாட காத்திருக்கிறார். ஆனால், ருத்துராஜ் கெயிக்வாட்டிற்கு, அவர் கடந்த ஆண்டு சிறப்பாக ஆடியதற்காக இந்த சீசனில் சிறிது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரரும், அவர் முயற்சிப்பதை செய்ய நாங்கள் தேவையான அளவில் வாய்ப்புகளை கொடுப்போம். அதுவே சிஎஸ்கே அணி எப்போதும் பின்பற்றுவதாகும்.
மேலும், தற்போதைய சூழலில் ருத்துராஜ் கெயிக்வாட் நீக்கப்பட மாட்டார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும். அவரின் ஆட்டத்தை பார்க்கலாம். பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும் என ஃபிளெம்மிங் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
