'அதே டீம், அப்படியே திரும்ப செஞ்சிருக்காங்க!!!'... 'இவங்களுக்கும் PLAYOFFSக்கும்'... 'அப்படி என்னதான் ராசியோ?!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை மீண்டும் ஒரு முறை 2019ஆம் ஆண்டைப் போலவே போட்டியை விட்டு வெளியேற்றியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி ஹைதராபாத்துக்கு சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தும், நிகர ரன் ரேட் காரணமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோல நடந்துள்ளது. நடப்பு சீசனில் முன்னதாக டெல்லி அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை கடைசி போட்டியில் தோற்கடித்தபோதும், ரன் ரேட் அடிப்படையில் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றன. இதையடுத்து கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் கடைசி இடத்திற்கு போராடின.
ஆனால் நேற்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் அசத்தல் வெற்றி பெற்று கொல்கத்தா அணியை போட்டியை விட்டு வெளியேற்றிவிட்டு பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல 2019ஆம் ஆண்டிலும் கேகேஆர், ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் 12 புள்ளிகளைப் பெற்றும், கேகேஆரின் +0.028 ரன் ரேட்டுடன் உடன் ஒப்பிடும்போது ஹைதராபாத்தின் ரன் ரேட் அதிகமாக +0.577 ஆக இருந்ததால் அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது.
இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், 2019ஆம் ஆண்டில் பிளே ஆஃப் தகுதிக்கான கடைசி லீக் போட்டியில் கேகேஆர் மும்பைக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்து வெளியேறியது. ஆனால் இந்த முறை ஹைதராபாத் அணி கடைசி லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற்று கொல்கத்தா அணியை வெளியேற்றியுள்ளது. இதையடுத்து தற்போது மும்பை (18 புள்ளிகள்), டெல்லி (16 புள்ளிகள்), பெங்களூர், மற்றும் ஹைதராபாத் (தலா 14 புள்ளிகள்) ஆகிய அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. கொல்கத்தா அணி 14 புள்ளிகள் பெற்றும் நிகர ரன் ரேட்டால் தொடரைவிட்டு மீண்டும் ஒரு முறை வெளியேறியுள்ளது.