"நாம என்ன அந்த காலத்து கிரிக்கெட்டா ஆடிட்டு இருக்கோம்?".. 'கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்!?'.. பந்த் ஆட்டம் குறித்து... முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாம் ஒன்றும் 70, 80-களில் விளையாடவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி ரிஷப் பந்த்தின் ஐபிஎல் ஆட்டம் குறித்து விமர்சித்துள்ளார்.
பந்த் ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்திலேயே சரியான பார்மில் இல்லை என்றும், அதுதான் அவர் சிறப்பாக விளையாடாததற்கும் காயம் பட்டதற்கும் காரணம் என்றும் மூடி கூறினார்.
கொரோனா லாக்-டவுனால் நல்ல பிட்னசை பராமரிப்பது சிரமம்தான் என்றும், ஆனால் விராட் கோலியின் பிட்னசை பந்த் உதாரணமாக கொள்ள வேண்டும் என்றும் மூடி தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரின் துவக்கம் முதலே சரியான ஆட்டங்களை அளிக்கவில்லை.
இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 274 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். இதன் சராசரி 30.44 மற்றும் ஸ்டிரைக் ரேட் 112.29.
இந்நிலையில், அவர் ஐபிஎல் தொடருக்கு வந்தபோதே சரியான வடிவத்தில் இல்லை என்றும் அதனால்தான் அவரால் இந்த தொடரில் சரியான செயல்பாட்டை காண்பிக்க முடியவில்லை என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இஎஸ்பிஎன்னின் கிரிக்இன்போவிற்காக பேசிய அவர் இதனை கூறியுள்ளார். அனைவரும் கொரோனா லாக்டவுனால் அவதிப்பட்டதை ஒப்புக் கொண்ட டாம் மூடி, ஆனால் ஒரு விளையாட்டு வீரர் இந்த சாக்குபோக்குகளை கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
"நாம் ஒன்றும் 70, 80களில் விளையாடவில்லை" என்று தெரிவித்த அவர், பந்த் உடலளவிலும் மனதளவிலும் சரியாக இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
மேலும், இதனால்தான் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீண்டும் பார்மிற்கு திரும்ப உதவி தேவைப்படுவதாகவும் மூடி குறிப்பிட்டார்.