'அடுத்த ஐபிஎல் போட்டி எங்கே நடக்கும்'...!!! பிசிசிஐ தலைவர் கங்குலி சொன்ன நேரடி பதில்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஐபிஎல் தொடரின்போது கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதால், இந்தியாவிலேயே ஐபிஎல் நடத்த முடியும் என பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டனும், பிசிசிஜ தலைவருமான சவுரவ் கங்குலி ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்கு அளித்தப் பேட்டியில், ஐபிஎல் தொடரின் அடுத்த பதிப்பு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள், மறு சீரமைப்பை செய்ய விரும்பும் சூழ்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன் முழு அளவிலான ஏலம் நடைபெறுமா என்பது குறித்து கேட்டதற்கு, “நாங்கள் இதுவரை எதையும் முடிவு செய்யவில்லை. இந்த சீசன் முடிவடையட்டும். ஏலம் குறித்து பிசிசிஐ ஆலோசித்து அழைப்பு விடுக்கும்” என்றார் கங்குலி.
மேலும், ‘அடுத்த ஐபிஎல் தொடரின்போது, நிச்சயமாக கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும். அதனால் இந்தியாவிலேயே ஐபிஎல் தொடரை நடத்த முடியும்’ என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்திற்குப் பிறகு தோனி குறிப்பிடுகையில், “அடுத்த 10 ஆண்டுகளை கவனத்தில் வைத்து நாங்கள் எங்கள் அணியை சற்று மாற்றியமைக்க வேண்டும். அனைத்தும் பிசிசிஐயின் முடிவை பொறுத்தே உள்ளது. இது ஒரு கடினமான ஆண்டு. பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடிய சீசன்களில், இதுவும் ஒன்றாகும்” என்று கூறியிருந்தார்.