'ஒரு 5 ரன் சேர்த்து அடிக்க முடியாதா?'.. விளாசும் ரசிகர்கள்!.. கொல்கத்தா அணி வெளியேறியது 'இது'னால தான்!.. மொத்த ப்ளானையும் புரட்டிப்போட்ட 'அந்த' இறுதி நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு5 ரன்னில் பிளே-ஆஃப் வாய்ப்பை கோட்டை விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
14 புள்ளிகள் பெற்று இருந்தாலும் பெங்களூர் அணியை விட நெட் ரன் ரேட்டில் 0.5 என்ற அளவில் பின்தங்கி பிளே-ஆஃப் வாய்ப்பை கோட்டை விட்டது கொல்கத்தா அணி.
கொல்கத்தா அணியின் ரசிகர்கள் 5 ரன் கூட கூடுதலாக எடுக்க முடியாத நிலையை சுட்டிக் காட்டி கடுமையாக விளாசி வருகின்றனர்.
2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முன்னேறி உள்ளன.
இதில் ஹைதராபாத், பெங்களூர் அணிகள் 14 புள்ளிகள் மட்டுமே பெற்று முன்னேறி உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 14 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூர் அணியை விட பின்தங்கி உள்ளது.
பெங்களூர் அணியின் நெட் ரன் ரேட் -0.172 ஆகும். கொல்கத்தா அணியின் நெட் ரன் ரேட் -0.214 ஆகும். 0.5 என்ற சிறிய வித்தியாசத்தில் கொல்கத்தா அணி பிளே-ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. கொல்கத்தா அணி கடைசியாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தால் கொல்கத்தா தற்போது பிளே-ஆஃப் சென்று இருக்கும்.
கொல்கத்தா அணி பல போட்டிகளில் மோசமாக ஆடியதை சுட்டிக் காட்டி, இந்த அணி 5 ரன்களில் பிளே-ஆஃப் போகாதது சரியான முடிவு தான் என பொதுவான ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
கொல்கத்தா அணி ரசிகர்கள் 5 ரன்கள் கூடுதலாக அடித்து இருந்தால், அல்லது இன்னும் 5 ரன்கள் குறைவான வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை தோல்வி அடையச் செய்து இருந்தால் பிளே-ஆஃப் சென்று இருக்கலாமே என கூறி வருகின்றனர்.