'ஐபிஎல் வரலாற்றுலயே'... 'முதல்முறையா இப்படி நடக்குது?!!'... 'பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொடரின்'... 'ஆச்சரியம் தரும் முடிவுகள்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் முதல்முறையாக இந்தாண்டு புள்ளிகள் பட்டியலில் ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமாக பங்கேற்ற 8 அணிகளில் தற்போது லீக் சுற்றுகள் முடிவடைந்து முதல் 4 இடத்தை பிடித்துள்ள அணிகள் பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றுள்ளன. அதில் மும்பை அணி 18 புள்ளிகளுடனும், டெல்லி 16 புள்ளிகளுடனும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 14 புள்ளிகளுடனும் பிளே ஆஃப்பிற்கு முன்னேறியுள்ளன.
இதையடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகளில் கொல்கத்தா 14 புள்ளிகளுடனும், பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளன. அதாவது இந்த 4 அணிகளுமே மிகவும் குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இதுபோல பிளே ஆஃப்பிறகு தகுதி பெறாத அணிகள் கூட 12 புள்ளிகள் பெற்று வெளியேறியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
அதாவது நடப்பு தொடரில் ஓரிரு போட்டிகளில் வெற்றி, தோல்விகள் மாறியிருந்தாலும் இந்த புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு பிளே ஆஃப் பட்டியலிலும் மாற்றம் இருந்திருக்கும். ஆனால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த சீசனில் ஒரு அணி கூட படுமோசமாக சொதப்பாமல் அனைத்தும் குறைந்தது 12 புள்ளிகளுடன் வெளியேறியுள்ளன.