‘புது ஜெர்சி, புது பெயர்.. ஆனா இது மட்டும் மாறவே இல்ல’!.. வெற்றிக்கு பின் ப்ரீத்தி ஜிந்தா சொன்ன ‘அந்த’ விஷயம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ட்வீட் செய்துள்ளார்.
14-வது ஐபிஎல் சீசன் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 221 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 91 ரன்கள், தீபக் ஹூடா 64 ரன்களும் கிறிஸ் கெயில் 40 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அறிமுக வீரர் சேதன் சாகரியா 3 விக்கெட்டுகள், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகள் மற்றும் ரியான் பராக் 1 விக்கெட் எடுத்தனர்.
இதனை அடுத்து 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் (119 ரன்கள்) நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து விக்கெட் விழுந்து கொண்டே இருக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்தது. இதனால் 4 வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.
A special mention to #Samson for an incredible knock ! So happy to start this tournament with a Win 🙏 Yeahh ! #PBKS 🏏
— Preity G Zinta (@realpreityzinta) April 12, 2021
இந்த நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில், ‘ஆஹா, என்ன மாதிரியான போட்டி. புதிய ஜெர்ஸியில் எங்களுக்கு இது புதிய ஆட்டம். ஆனால் போட்டியைப் பார்க்கும் எங்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுப்பதை மட்டும் பஞ்சாப் அணி நிறுத்தவே இல்லை. என்ன செய்வது? ஆரம்பத்தில் எங்களுக்கு இது சரியான போட்டியாக இல்லாவிட்டாலும், முடிவு எங்களுக்கானதாக இருந்தது. வாவ்... கே.எல்.ராகுல், தீபக் ஹூடா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்’ என ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார். மேலும் சதமடித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ப்ரீத்தி ஜிந்தா பாராட்டு தெரிவித்துள்ளார்.