'கண்ணா.. இது சும்மா டிரைலர் தான் மா!.. மெயின் பிக்ச்சர் இன்னும் பாக்கலயே'!.. தல தோனி குறித்து... சுனில் கவாஸ்கர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணி கேப்டன் தோனியின் ஸ்டாமினா குறித்து சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே 18 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
இந்த தொடரில் ஃபார்மில் இல்லாது தவித்த ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ் ஆகியோரின் ருத்ரதாண்டவம் மற்றும் தீபக் சஹாரின் மிரட்டலான பவுலிங் ஆகியவை சென்னை அணிக்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்று கொடுத்தது.
இந்த வெற்றி சென்னை ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதைவிட மேலாக, கேப்டன் தோனியின் அதிரடி கம்பேக் ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சீசனைபோல் அன்றி இந்த சீசனில் முதல் போட்டியில் தோல்வியை தழுவியது சி.எஸ்.கே. எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ஆனால், பழைய தோனியை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் போட்டியில் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார் தோனி. பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் 7-வதாக இறங்கிய தோனி ரன் எடுக்க சிரமப்பட்டார். 18 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். கொல்கத்தா உடனான போட்டியில் தோனி ரன் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
அப்போது தான், 16.3 ஓவர்களில் 164 ரன்களுக்கு நன்றாக ஆடி வந்த மெயின் அலி அவுட் ஆகவே, 4-வதாக களமிறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் தோனி. தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங்கில் மிட் ஆஃப் திசையில் மெகா சிக்ஸர் ஒன்று விளாசினார். 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அணிக்கு சிறு பங்களிப்பு கொடுத்தார்.
தோனி ஃபார்முக்கு திரும்பியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக கவாஸ்கர் பேசுகையில், தோனி நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டார். ரன் ரேட் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், ராயுடு, ரெய்னா அல்லது ஜடேஜாவை விட, தன்னால் தான் ரன் ரேட்டை சரியாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை அவர் உணர்ந்தார். ஒரு இன்னிங்ஸின் சிறிய பங்களிப்பை அவர் செய்தார். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இந்தியா முழுவதும் அவர் இவ்வாறு பேட் செய்வதையே விரும்புகிறது. அவருக்கு சிறப்பு திறமை உள்ளது. நாம் இன்னும் இதுபோல் நிறைய சிக்ஸர்களைப் பார்ப்போம். தோனி தொடர்ந்து 4-வது அல்லது 5-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
கவாஸ்கரின் விருப்பத்தைப் போல் தோனியின் ஃபார்ம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.