மொத்த டீமும் சொதப்புது!.. இவர் ஒருத்தர் மட்டும் தனி ஆளா போராடுறார்!.. இந்த ஐபிஎல்-இன் சூப்பர் ஹீரோ!.. தடைகளை தாண்டி சாதிக்கும் தமிழர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணியில் ஆடி வரும் தமிழக வீரர் ஷாருக்கான் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
சென்னைக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
அப்போது தமிழக வீரர் ஷாருக்கான் மட்டுமே பஞ்சாப் அணிக்காக அதிரடியாக ஆடினார். 47 ரன்கள் எடுத்த ஷாருக்கான் அன்று பஞ்சாப் அணியை சரிவில் இருந்து மீட்டார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஷாருக்கான் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். சென்னைக்கு எதிரான மேட்ச்சில் சொதப்பியதைப் போலவே நேற்றும் பஞ்சாப் அணி ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியிலும் மிக மோசமாக ஆடியது. பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு சென்றனர்.
ராகுல் 4, கெயில் 15, மயங்க் 22, பூரான் 0, ஹூடா 13 என்று மிக மோசமாக எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் சென்றனர். ஆனால் தமிழக வீரர் ஷாருக்கான் மட்டும் தொடர்ந்து பஞ்சாப் அணிக்காக அதிரடியாக ஆடினார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் திணறிய போது ஷாருக்கான் கவலையே இல்லாமல் அதிரடியாக சிக்ஸ் அடித்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக பந்தை கூட பார்க்க முடியாத அளவிற்கு பந்து ஸ்பின் ஆனது. ஆனால் ஷாருக்கான் சிறப்பாக ஸ்வீப் ஷாட்களை ஆடி ஸ்பின் பவுலர்களை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஒரு பக்கம் ரஷீத் கான் பந்தை சிறப்பாக எதிர்கொண்ட ஷாருக்கான், இன்னொரு பக்கம் மற்ற பவுலர்கள் பந்துகளை அடித்து நொறுக்கினார்.
எல்லா பந்தையும் அடிக்காமல் தேவையான பந்துகளை மட்டும் குறி வைத்து அடித்தார். இந்த போட்டியில் 17 பந்தில் 2 சிக்ஸ் அடித்து 22 ரன்கள் எடுத்துள்ளார். தன்னுடைய திறமையை மீண்டும் ஷாருக் கான் நிரூபித்துள்ளார். பஞ்சாப் அணியின் புதிய 'சூப்பர் பினிஷராக' ஷாருக்கான் உருவெடுத்துள்ளார்.