‘பரபரப்பாக’ நடந்து வரும் ஏலத்தில்... ‘அடுத்தடுத்து’ இளம் வீரர்களை வாங்கிக் குவித்த ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 19, 2019 06:21 PM

ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் பரபரப்பாக நடந்து வருகிறது.

IPL Auction 2020 RR Bought Robin Uthappa Jaydev Unadkat

கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக  8 அணிகள் பங்கேற்றுள்ளன. அனைத்து அணிகளும் தங்களுடைய வீரர்களை சிலரை  ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள நிலையில், மீதமுள்ள 73 வீரர்களுக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக ராபின் உத்தப்பாவை ரூ 3 கோடிக்கு வாங்கியுள்ளது. அடுத்ததாக இந்திய அணி பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கண்ட்டை அந்த அணி ரூ 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அவருக்கு அடுத்ததாக இளம்வீரர் யாஷாஸ்வி ஜைஸ்வாலை ரூ 2.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் அனுஷ் ராவத்தை ரூ 80 லட்சத்துக்கும், ஆகாஷ் சிங்கை ரூ 20 லட்சத்துக்கும் அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதையடுத்து கார்த்திக் தியாகி ரூ 1.30 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

Tags : #IPL #RAJASTHAN-ROYALS #IPL2020 #AUCTION #ROBINUTHAPPA #JAYDEVUNADKAT