சிஎஸ்கே உடன் முட்டி மோதி... மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 19, 2019 05:49 PM

2020-க்கான ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள் பங்கு கொண்டு, தங்களது அணிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை எடுத்து வருகின்றனர்.

ipl auction 2020 Nathan Coulter Nile goes to mumbai indians

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கிறிஸ் லின்னை 2 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. இந்நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கு ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வேகப் பந்து வீச்சாளர் நேதன் கவுல்டர் நைன்-ஐ 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி எடுத்துள்ளது.

சிஎஸ்கே அணியுடன் முட்டி மோதி அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டியுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்த அவர், ஐபிஎல் 2020 முன்னிட்டு அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். 

 

Tags : #IPL2020 #AUCTION #MI #CSK