"இதோட தான் பொழுது விடிஞ்சது.. யாரு பார்த்த வேலை இது?".. கலாய்த்த அஷ்வின்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ள ட்வீட் கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அதில் அஸ்வின் குறித்து அதில் குறிப்பிட்டுள்ள விநோதமான தகவல் தான்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "தோனிக்காக தான் விளையாடினேன்.. அப்புறம் தான் நாட்டுக்காக".. உருகிய சின்ன தல ரெய்னா..!
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பு என்பது இந்தியா அணிக்கு இந்த டெஸ்ட் தொடரில் வெல்வது மூலம் தான் கைக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வியூகம் அமைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவும் இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. முன்னதாக, 2018 - 19 ஆம் ஆண்டிலும், 2020 - 21 ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாறு படைத்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்களின் சுழற்பந்து வீச்சு நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் போலவே பவுலிங் ஆக்ஷன் கொண்ட இந்திய இளம் வீரர் மகேஷ் பிதியாவை கொண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அஸ்வினின் பையோ தவறுதலாக இருக்கிறது. வலது கை ஆஃப் பிரேக் அல்லது வலது கை ஸ்பின்னரான அஸ்வின் குறித்து அந்த பையோவில் வித்தியாசமாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அதில் அஸ்வினின் பந்துச்சு குறித்து "வலது கை ஆஃப் பிரேக்?" மற்றும் "வலது கை லெக் பிரேக்?" என குழப்பத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அஸ்வின்,"இன்றைய காலை காபியோடு இது வந்தது. இதனை யார் உருவாக்கியது என எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார் அஸ்வின். அஸ்வினின் இந்த ட்வீட் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
My morning coffee came with this and I wonder who has done this😂😂. pic.twitter.com/TAamDMcLVH
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 5, 2023
Also Read | வீட்ல கோல்டன் Fish வளர்த்தது ஒரு குத்தமா?.. ஹவுஸ் ஓனரின் ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ்.. குழம்பிப்போன பெண்..!

மற்ற செய்திகள்
