"சேட்டை புடிச்சவருப்பா".. ஷமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அஸ்வின்.. அவருக்கே சிரிப்பு வந்துடுச்சு!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருந்தது. முதல் டெஸ்ட் போட்டியை போலவே இந்த போட்டியும் மிக விறுவிறுப்பாகவும் ஆரம்பமாகி உள்ளது.
![Ashwin Bizarre celebration shami and sunil gavaskar reacts Ashwin Bizarre celebration shami and sunil gavaskar reacts](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ashwin-bizarre-celebration-shami-and-sunil-gavaskar-reacts.jpg)
Images are subject to © copyright to their respective owners
மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை அளித்திருந்தது. ஆனால் நடுவே பந்துவீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரே ஓவரில் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர் விக்கெட்டை எடுக்க, போட்டியும் மாறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து அவுட், ஆக கடைசி கட்டத்தில் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். தொடர்ந்து கம்மின்ஸ் அவுட்டாகி வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்ததால் 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடி இருந்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இதனிடையே, அஸ்வின் செய்த ஒரு கலகலப்பான விஷயம் தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் விக்கெட்டையும் ஷமி எடுக்க, அப்போது இந்திய வீரர்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு விக்கெட்டை கொண்டாடி இருந்தனர். அந்த சமயத்தில் ஷமியின் பின்னால் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வேடிக்கையாக ஷமியின் இரண்டு காதுகளையும் பந்தை ஸ்பின் செய்வது போல திருகி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
அஸ்வின் அப்படி செய்ததும் யாருடா இது என்பது போல ஷமியும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்து சிரிக்கவும் செய்தார். அஸ்வினின் இந்த குறும்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கூட கவனம் பெற்று அனைவரையும் சிரிக்க வைத்திருந்தது. அந்த சமயத்தில் வர்ணனையிலிருந்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், "அஸ்வினிடம் இது பற்றி பின்பு கேட்டால் அடுத்த ஒரு பந்தை வீச பயிற்சி மேற்கொண்டதாக தெரிவிப்பார்" என வேடிக்கையாகவும் குறிப்பிட்டார்.
Naughty #Ashwin pulling Shami ears...#INDvAUS #AUSvIND pic.twitter.com/CKpOkj4uP1
— BishnuM (@BishnuM12851267) February 17, 2023
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)