முதல் டெஸ்ட்ல ஜடேஜா, 2 ஆவது TEST -ல அஸ்வின்.. "ஒரே ஓவரில் மாயாஜாலம் செய்த சூழல்".. போட்டியையே மாத்திட்டாரே!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கணவர் இழப்பால் கதறித் துடித்த மனைவி.. அழுதுகிட்டு இருக்கும் போதே பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.
முதல் போட்டியில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்த சூழலில், ஆஸ்திரேலியா அணி ரன் அடிக்க தடுமாற்றம் கண்டிருந்ததால் போட்டியும் மூன்றாவது நாளிலேயே முடிவடைந்து இந்திய அணி வெற்றியும் பெற்றிருந்தது. முதல் போட்டி தோல்விக்கு நிச்சியம் பதிலடி கொடுக்க வேண்டுமென ஆஸ்திரேலிய அணியும், மறுபுறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முன்னேறுவதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்திய அணியும் களமிறங்கி உள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் ஐம்பது ரன்னாக இருக்கும் போது டேவிட் வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து மார்னஸ் ஆட வந்தார்.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அற்புதமான காரியத்தை ஒரே ஓவரில் செய்து முடித்தார். 18 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த மார்னசை அவுட் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின், அதே ஓவரில் புதிதாக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித்தையும் ரன் எதுவும் எடுக்காமல் இரண்டே பந்தில் வெளியேற்றி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் முறையே மார்னஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் இருக்கின்றனர். அப்படிப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான்களை ஒரே ஓவரில் மூன்று பந்துகள் மத்தியில் விக்கெட் எடுத்து அஸ்வின் பட்டையை கிளப்பி உள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டும் வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மார்னஸ் மற்றும் ஸ்மித் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா எடுத்து போட்டியின் திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருந்தார். அப்படி இருக்கையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர்கள் இரண்டு பேர் விக்கெட்டையும் ஒரே ஓவரில் அஸ்வின் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Marnus Labuschagne ✅
Steve Smith ✅@ashwinravi99 gets 2⃣ big wickets in one over 💪💥#TeamIndia #INDvAUS pic.twitter.com/UwSIxep8q2
— BCCI (@BCCI) February 17, 2023