"முதல் நாளுலயே ஸ்டார்ட் பண்ணிட்டாய்ங்களா?".. ஆஸ்திரேலிய வீரர்கிட்ட சைகை மொழியில் அஸ்வின் சொன்ன விஷயம்.. என்ன நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இந்த தொடர், இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக மிக முக்கியமானதாகும்.
Images are subject to © copyright to their respective owners
இதற்கு காரணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரை 3 - 0 என்ற கணக்கிலோ, 3 - 1 கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய நெருக்கடியும் உள்ளது. மறுபக்கம் கடந்த இரண்டு முறை நடந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய மண்ணில் அதே ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை புரிந்திருந்தது.
அதற்கு பழி வாங்கவும் ஆஸ்திரேலிய அணி தீவிரமாக தயாராகி வரும் சூழலில், இந்திய அணியும் வெற்றி பெற வேண்டும் என்பதால் நிச்சயம் இந்த தொடர் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படி ஒரு சூழலில், முதல் டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் வைத்து ஆரம்பமாகி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கவாஜா 1 ரன்னில் சிராஜ் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ ஆனார். அதே போல, வார்னரும் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், முகமது ஷமி பந்து வீச்சில் க்ளீன் போல்டு ஆனார். இதன் பின்னர், ஸ்மித் மாற்றும் மார்னஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மார்னஸ் மற்றும் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் ஜடேஜா. நீண்ட நாளுக்கு பிறகு இந்திய அணிக்காக ஆடிய ஜடேஜா, முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையை கிளப்பி உள்ளார்.
இதனிடையே, இந்த போட்டிக்கு மத்தியில் அஸ்வின் மற்றும் மார்னஸ் ஆகியோரிடையே சைகை முறையில் நடந்த சம்பவம் அதிகம் வைரலாகி வருகிறது. அஸ்வின் வீசிய பந்தை மார்னஸ் எதிர்கொண்ட போது சற்று டர்ன் ஆகி, உடலில் பட்டது. இதனை மார்னஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பந்து ஸ்பின் ஆவது போல மார்னஸை நோக்கி சைகை காட்டினார் அஸ்வின். பதிலுக்கு மார்னஸும் அஸ்வின் செய்ததை போலவே திரும்பி வேடிக்கையாக செய்து காட்டுகிறார்.
Images are subject to © copyright to their respective owners
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கு நடுவே இது போன்று இரு அணி வீரர்கள் மாறி மாறி ஏதாவது பேசுவதும், சைகை காட்டுவதும் வாடிக்கையான ஒன்று தான்.
— Gajendra Singh Naruka (@imNaruka13) February 9, 2023