IPL-ல் மறுபடியும் நுழைந்த கொரோனா.. ‘ஒருவருக்கு பாசிடிவ்’.. வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Also Read | அவ்ளோதான்.. இனி ‘அந்த’ CSK வீரரை நடப்பு ஐபிஎல் சீசன்ல பார்க்க முடியாது.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 24-ல் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு (Patrick Farhart) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்று பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | அம்மாடியோவ்..! என்னா அடி.. ‘ரெண்டாக உடைந்த ஸ்டம்ப்’.. RR-ஐ மிரள வைத்த பாண்ட்யா..!

மற்ற செய்திகள்
