“ஜெயிக்கிற நேரத்துல தேவையில்லாம அப்படி செஞ்சிருக்க கூடாது”.. சீனியர் வீரரை மறைமுகமாக சாடிய ரோகித்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
Also Read | ‘இப்படி பண்ணிட்டோமே’.. சோகமாக உட்கார்ந்த சூர்யகுமார்.. அப்போ பொல்லார்டு செய்த செயல்.. மனுசன் வேறலெவல்யா..!
ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்கமே சிறப்பாக அமைந்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 52 ரன்களும், ஷிகர் தவான் 70 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா 30 ரன்களும், ஷாருக்கான் 15 ரன்களும் விளாச 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷான் 3 ரன்னில் வெளியேறினார். மிடில் ஆர்டரில் டேவால்ட் பிரேவிஸ் 49 ரன்கள், திலக் வர்மா 36 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் எடுத்தனர். ஆனாலும் 20 ஓவர்களில் 186 ரன்களை மட்டும் அடித்து மும்பை அணி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘அணியில் எந்தவொரு தவறையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அனைத்தையும் சரியாக தான் செய்தோம். வெற்றி பெறும் நேரத்தில் தேவையில்லாத 2 ரன் அவுட்கள் எங்களை பின்நோக்கி இழுத்துவிட்டது. பஞ்சாப் அணியின் பவுலிங் சிறப்பாக செயல்பட்டது.
நாங்கள் ஒரு மன எண்ணத்தில் களமிறங்கினோம். ஆனால் முழுவதுமாக மாறிவிட்டது. தவறுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு சிறப்பான கம்பேக் கொடுப்போம். சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடினால் 199 என்பது சுலபமாக அடிக்கக்கூடிய இலக்குதான்’ என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
நேற்றைய போட்டியில் 30 ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா தேவையின்றி ரன் அவுட்டானார். அதே போல பொல்லார்ட்டும் முக்கியமான கட்டத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்த இரு ரன் அவுட்டுகள் தான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி மும்பை அணி தோல்வி பெற காரணமாக அமைந்தது. அதனால் சீனியர் வீரரான பொல்லார்ட்டை ரோகித் சர்மா மறைமுகமாக சாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | ரோகித் சர்மாவுக்கு சோதனை மேல் சோதனை.. ‘இதோட ரெண்டாவது தடவை’.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி ஆக்ஷன்..!