Beast Others

8 வருசத்துக்கு முன்னாடியும் MI இப்படிதான் தோத்தாங்க.. ஆனா அதுக்கப்புறம் நடந்ததே வேற.. அந்த ‘மேஜிக்’ மறுபடியும் நடக்குமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 14, 2022 05:57 PM

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக நிலையில் உள்ளது.

MI comeback and reach playoffs after 5 defeat in 2014

Also Read | ‘MI டீம் மேல அப்படி என்ன கோவம்’.. வேறலெவல் சம்பவம் பண்ணிய தவான்.. ரெய்னாவின் சாதனை முறியடிப்பு..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவியது. இனி எஞ்சிய 9 போட்டியில் 8 போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு மும்பை தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இதே போன்று மும்பை அணி தொடக்கத்தில் தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்பின்னர் எஞ்சிய 9 போட்டியில் 7 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மேலும் புள்ளி பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

அந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 11 போட்டியில் வென்று 22 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. கொல்கத்தா 9 வெற்றிகளுடன் 2-வது இடத்திலும், சிஎஸ்கே அணி 9 வெற்றியுடன் 3-வது இடத்திலும் இருந்தது. முதல் 3 அணிகள் அதிக வெற்றியை பெற்றதால், அந்த தொடரில் 4-வது இடம் பிடிக்கும் அணி 14 புள்ளியை பெற்றாலே போதும் என்ற நிலை உருவானது.

அப்போது மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய 2 அணியும் 14 புள்ளிகளுடன் இருந்தன. அதில் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. தற்போதும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி அதிக வெற்றியை பெற்றால், 4-வது இடம் பிடிக்கும் அணிக்கு சுலபமாகிவிடும். ஆனால் இம்முறை 10 அணிகள் பங்கேற்பதால் போட்டி அதிகமாக இருக்கும் என தெரிகிறது. மேலும் ரன் ரேட்டும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது மும்பை அணி தோல்வியில் இருந்து மீண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Also Read | கடையில் தனியாக இருக்கும் ‘பெண்கள்’ தான் குறி.. சிக்கிய பட்டதாரி இளைஞர்.. வெளியவந்த திடுக்கிடும் தகவல்..!

Tags : #CRICKET #MUMBAI INDIANS #MI #MI COMEBACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MI comeback and reach playoffs after 5 defeat in 2014 | Sports News.