அவ்ளோதான்.. இனி ‘அந்த’ CSK வீரரை நடப்பு ஐபிஎல் சீசன்ல பார்க்க முடியாது.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-ல் தோல்வியடைந்து ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து வருகிறது. சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் இல்லாததே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். காயம் குணமாகததால், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
இதனை அடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு முதுகு பகுதியில் மீண்டும் காயம் ஏற்பட்டது. அதனால் சில மாதங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் முழுவதுமாக விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமான கட்டத்தில் அவர் விலகியது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | அம்மாடியோவ்..! என்னா அடி.. ‘ரெண்டாக உடைந்த ஸ்டம்ப்’.. RR-ஐ மிரள வைத்த பாண்ட்யா..!

மற்ற செய்திகள்
