IPL 2022: சட்டுன்னு ஆரஞ்ச் தொப்பியைக் கழட்டிய பட்லர்… இதுதான் காரணமா? ஹார்ட்டின் விட்ட FANS!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின.
Also Read | அம்மாடியோவ்..! என்னா அடி.. ‘ரெண்டாக உடைந்த ஸ்டம்ப்’.. RR-ஐ மிரள வைத்த பாண்ட்யா..!
இந்தியாவில் ஐபிஎல்…
ஐபிஎல் 15 ஆவது சீசன் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டி இந்தியாவில் முழுமையாக நடந்து வருகிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளன. இதனால் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்துவருகின்றன.
குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்…\
நேற்றைய 24 ஆவது போட்டியில் ஹர்திக் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் 192 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா 87 ரன்கள் சேர்த்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை ஆடினார். அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆரஞ்ச் கேப் சுவாரஸ்யம்…
இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் விளையாடினார். ஒரு கட்டத்தில் அவர் இந்த சீசனின் அதிக ரன்களைக் குவித்த வீரரான ஜோஸ் பட்லரை தாண்டிச் சென்றார். அப்போது களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் தான் அணிந்திருந்த ஆரஞ்ச் தொப்பியை உடனடியாகக் கழட்டி இடுப்பில் சொருகிக்கொண்டார். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இது சம்மந்தமான வீடியோக்களைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள் பட்லரை ‘ஜெண்டில்மென்’ எனப் பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் ஆரஞ்ச் கேப்….
ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி24 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மீண்டும் அதிக ரன்கள் சேர்த்த வீர்ரானார். அதன் மூலம் மீண்டும் ஆரஞ்ச் தொப்பியை அவர் கைப்பற்றினார்.
Also Read | 10 வருஷமா பூட்டுன வீட்டுக்குள்ள தவித்த பாட்டி.. பசி தாங்க முடியாம மண்ணை தின்ற சோகம்..!