கடைசி வரை இருந்தா... டீம் கண்டிப்பா 'தோத்துரும்'... 7 வருடங்களாக விடாமல் 'துரத்தும்' ராசி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ராசி உண்டு. மும்பை இந்தியன்ஸ் அணி ஓபனிங் போட்டியில் 8 வருடங்களாக தோல்வியுற்று வருகிறது. இதுபோல பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் திணறி வருகிறது.

அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு ஒரு மோசமான ராசி இருக்கிறதாம். அதாவது தோனி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தால் சென்னை அணி தோற்று விடுகிறதாம். குறிப்பாக சேஸிங்கில் இந்த ராசி அப்படியே பலித்து இருப்பதாக 7 வருட ரெக்கார்டை எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இது தவறாமல் நடைபெறுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக இரண்டு முறையும், பெங்களூர் அணிக்கு எதிராக 1 முறையும், மும்பை அணிக்கு எதிராக 1 முறையும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 1 முறையும் இந்த ராசி பலித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த ராசி பொய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Dhoni unbeaten in a losing run chase (IPL)
63* vs #MI Kolkata 2013
42* vs #KXIP Mumbai WS 2014
79* vs #KXIP Mohali 2018
84* vs #RCB Bengaluru 2019
29* vs #RR Sharjah 2020 *#RR #CSK #RRvCSK #IPL2020 #IPL
— Cricbuzz (@cricbuzz) September 22, 2020

மற்ற செய்திகள்
