"இதுதான் அணியை வழிநடத்துறதா? உடனே 3 சிக்ஸர் அடிச்சார்னு கொடி தூக்காதீங்க!".. 'தோனியை' கடுமையாக 'விமர்சித்த' வீரர்!.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாண்ட சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு கேப்டன் தோனி 7ம் நிலையில் களம் இறங்கியதுதான் என்றும் அது அர்த்தமற்ற செயல் என்றும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாகச் சாடியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கி ஆடும்போது, தோனி போன்ற ஒரு ஹிட்டர் இறங்காமல் பின்னால் தள்ளிப்போட்டதுதான் கேப்டனாக அணியை வழிநடத்துவதா என்று கவுதம் கம்பீர் தோனி மீதான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நேற்றைய போட்டியை பொருத்தவரை தோனி இறங்கும் போது ஆட்டம் முடிந்து, 38 பந்துகளில் 103 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தபோது, டுபிளெசிஸும் 18 பந்துகளில் 17 என்று கொஞ்சம் திணற, கடைசியில் சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு சுருண்டது.
பவர் ப்ளேயில் 4 ஓவர்களில் 26/1 என்று சாதாரணமாக இருந்த ராஜஸ்தான் அணியை, சஞ்சு சாம்ச்ன, ஸ்மித் ஜோடி ஆடி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே ஸ்பின்னர்களை மைதானத்துக்கு வெளியே அடித்து 4 ஓவர் 26 ரன்களிலிருந்து 10 ஒவர்கள் 119 ரன்களுக்கு 9 சிக்சர்கள் ஒரு பவுண்டரிகளை விளாசினார். ஸ்மித் 47 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்தார், கடைசியில் ஆர்ச்சர் 27 ரன்கள் விளாச ராஜஸ்தான் 216 ரன்களைக் குவித்தது.
இந்த சூழலில 7ம் நிலையில் தோனி இறங்கியதை கம்பீர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ டி20 டைம் அவுட் நிகழ்ச்சியில் கடுமையாகச் சாடினார். அதில், “தோனி 7ம் நிலையில் இறங்கியதும், ருதுராஜ் கெய்க்வாடையும், சாம்கரணையும் தோனி முன்னால் களமிறங்கச் செய்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இதில் அர்த்தமே இல்லை. கேப்டனாக அணியை வழிநடத்துவது என்று இதனை அழைக்காதீர்கள். உடனே கடைசி ஓவரில் தோனி 3 சிக்சர்கள் அடித்தார் என்று கூறுவார்கள், அதனால் என்ன ? அது அவரது சொந்த ரன்களே.
கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்தை 4ம் நிலை அல்லது 5ம் நிலையில் இறங்கிச ஆடியிருந்தால், டுபிளெசிசுடன் சேர்ந்து ஒரு சுவாரசியமான ஆட்டமாக இதை மாற்றியிருக்கலாம். சிஎஸ்கே அணியிடம் தீவிரமே இல்லை, நோக்கமே இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் இதை எதிர்ப்பார்க்கவில்லை” என்று கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.