அவுட் சர்ச்சை: திட்டி போஸ்ட் போட்டு... அவசர அவசரமாக 'டெலிட்' செய்த கேப்டன் மனைவி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் டாம் கரணுக்கு அம்பயர்கள் அவுட் கொடுத்து மீண்டும் அவரை கூப்பிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை கேப்டன் தோனி இதுகுறித்து கோபமாக அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

ரீபிளேயில் அவுட் இல்லை என தெரிந்தது. பின்னர் தோனி பந்தை கீழே விட்டு பிடித்ததும் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து டாம் கரண் மீண்டும் உள்ளே வந்து ஆடினார். இதைப்பார்த்த தோனி மனைவி சாக்ஷி, '' கோடிக்கணக்கான பேர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய மதிப்பு மிக்க போட்டிகளில் அம்பயர்கள் மேம்படுத்தப்பட வேண்டும்,'' என திட்டி இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார்.
தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் அதை டெலிட் செய்து விட்டார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான போட்டியின் போது தோனி களத்தில் இறங்கி அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். அதேபோல இந்த ஆண்டும் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
