அவ்ளோ தூரம் எடுத்து சொல்லியும்... தகர்ந்து போன சென்னையின் 'பிரம்மாஸ்திரம்'... ஆடிப்போன தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோல்வியைத் தழுவியது. குறிப்பாக ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி விட்டார். 9 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்து சஞ்சு மிரட்டி சென்று விட்டார்.
சென்னை அணியின் பிரம்மாஸ்திரம் என புகழப்படும் ஸ்பின் பவுலிங்கை சாம்சன் துவைத்து தொங்க விட்டு போய்விட்டார். சாம் கரண், ஜடேஜா, பியூஷ் சாவ்லா என ஒவ்வொரு பவுலரிடமும் சென்று தோனி பேசியும் புண்ணியம் இல்லை.கடைசியில் தீபக் அவரின் விக்கெட்டை எடுத்த பிறகே சென்னை அணிக்கு உயிர் வந்தது போலானது.
சஞ்சு சாம்சன் அடிக்க ஆரம்பித்ததும் தோனி ஸ்பின் பவுலிங்கை கையில் எடுத்தார். ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. சென்னையின் பிரம்மாஸ்திரம் என புகழப்படும் ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை என்பதால் அடுத்தடுத்த போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Well played Today 🔥🔥💯
Sanju🔥😘#sanjusamson pic.twitter.com/wBfDsNmoO5
— Vishnu (@Vishnu26567850) September 22, 2020