'அவர்' தான் ஐபிஎல் 'வேணாம்னு' சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் இப்டி?... 'குழம்பும்' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 16, 2019 07:24 PM

2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வருகின்ற 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதே நேரம் ஜோ ரூட், மிட்செல் ஸ்டார்க், சாம் பில்லிங்ஸ் போன்ற பிரபல வீரர்கள் பலரும் ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளனர்.

IPL 2020: David Warner Welcomes Mitchell Starc To SunRisers Hyderabad

இந்தநிலையில் ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும், அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரருமான வார்னர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்றால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை, ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. தொடர்ந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அருகில் ஸ்டார்க்கும், தானும் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ''ஹைதராபாத் அணிக்கு வரவேற்கிறேன் ஸ்டார்க்'' என வார்னர் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் பலரும் உண்மையிலேயே ஸ்டார்க் ஹைதராபாத் அணிக்கு வரப்போகிறாரா? இல்லை வார்னர் கிண்டலுக்காக பதிவிட்டாரா? என குழம்பி வருகின்றனர்.