வெற்றியை தட்டிச்சென்ற 'தனி ஒருவன்'... பஞ்சாப்க்கு புது 'கேப்டன்' கெடைச்சுட்டாரு போல!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 12, 2019 09:57 PM

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. கர்நாடகா முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் சேர்த்தது. தமிழ்நாடு 307 ரன்கள் எடுத்தது. 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா 151 ரன்னில் சுருண்டது. தமிழ்நாடு சார்பில் விக்னேஷ் 3 விக்கெட்டும், அஸ்வின் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Ranji Trophy: Karnataka defeat Tamil Nadu by 26 runs

பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. முரளி விஜய்-அபினவ் முகுந்த் இருவரும் 9 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து 10-வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் அவுட் ஆனார். அவரது விக்கெட்டுக்கு பின் தமிழக அணி சீட்டுக்கட்டு போல சரியத்தொடங்கியது.

எனினும் தினேஷ் கார்த்திக்(17), முருகன் அஸ்வின் (23), சித்தார்த் (20) ஆகியோரின் போராட்டத்தால் தமிழக அணி டிராவை நோக்கி சென்றது. ஆனால் 20-வது ஓவரின் 3-வது பந்தில் கர்நாடக அணியின் கிருஷ்ணப்பா கவுதம் வீசிய பந்தில் விக்னேஷ் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி கர்நாடக அணியிடம் தோல்வியைத் தழுவியது.

சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக அணி, தமிழக அணியை 1 ரன்னில் வித்தியாசத்தில் வீழ்த்தியது. (அந்த போட்டியிலும் கடைசி ஓவரை கவுதம் தான் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.) 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து கவுதம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி, வெற்றியை தனி ஒருவனாக தமிழ்நாடு அணியிடம் இருந்து தட்டிச்சென்றார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் அஸ்வின், சாய், முருகன், அபரஜித், சித்தார்த் என மொத்தம் 5 ஸ்பின்னர்கள்(13) வைத்து விளையாடியதற்கு ஒரு பேட்ஸ்மேனை எக்ஸ்ட்ராவாக களமிறக்கி இருக்கலாமே என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் கர்நாடக அணி கோபால்(15), கவுதம்(14) என 2 ஸ்பின்னர்களை மட்டுமே வைத்து விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது.

அதேநேரம் ராஜஸ்தான் அணியில் இருந்து சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ள கவுதம் தொடர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதால் அவரை அந்த கேப்டனாக நியமிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் கே.எல்.ராகுலா? இல்லை கவுதமா? என்பதை விரைவில் அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.