'என்னைய' டக்-அவுட் ஆக்கி... வெளியே 'அனுப்புனியே' ராசா... இப்போ 'ஒனக்கும்' அதே கதிதானா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 19, 2019 12:42 AM

இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் ஒரு மோசமான வரலாற்றை இரண்டு அணிகளின் கேப்டன்களும் சேர்ந்து படைத்துள்ளனர்.

Virat Kohli Gives Angry Send-Off To Pollard, Watch Video

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸின் 39.3 -வது ஓவரின்போது பொல்லார்டு பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு 29.3 ஓவரின் போது மொஹம்மது ஷமியின் பந்தில் பண்டிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பொல்லார்டு பந்தில் டக் அவுட் ஆன கடுப்பில் இருந்த கோலி, பொல்லார்டு டக் அவுட் ஆகி வெளியேறுகையில் கோபமாக ரியாக்ஷன் கொடுத்து பொல்லார்டை வெறுப்பேற்றினார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரெண்டு பேருமே டக் அவுட் தானே எதுக்கு இவ்ளோ கோபம்? என கிண்டலடித்து வருகின்றனர்.