நியாயமா 'டக்-அவுட்' ஆகிருக்கணும்... கேட்ச் புடிச்சும் ஏன் 'அவுட்' கேட்காம விட்டுட்டாரு?.... ரசிகர்கள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுபாயில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. வழக்கம்போல ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்ப தற்போது தோனி, டூ பிளசிஸ் இருவரும் அணியை கரைசேர்க்க வெகுவாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி அணியில் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த ஓபனிங் பேட்ஸ்மேன் பிரித்வி ஷாவை அவுட் செய்த கிடைத்த வாய்ப்பை, கேப்டன் தோனி கோட்டை விட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் ஓவரை தீபக் சாஹர் வீச பிரித்வி ஷா எதிர்கொண்டார்.
அந்த ஓவரின் 2-வது பந்தை பிரித்வி எதிர்கொண்ட போது பந்து அவரது பேட்டில் லேசாக உரசியது போல சென்றது. பேட்டுக்கும், காலுக்கும் இடையில் சென்ற அந்த பந்தை தோனி கேட்ச் பிடித்தார். ஆனால் அவுட் எதுவும் கேட்கவில்லை. தீபக் சாஹர் தோனிக்கு அருகில் நின்றிருந்த வாட்சன் என யாருமே அந்த பந்துக்கு நடுவரிடம் அவுட் கேட்கவில்லை.
ரீபிளேவில் அந்த பந்து ப்ரித்வி ஷா பேட்டில் பந்து இன்சைட் எட்ஜ் ஆகி இருப்பது தெரிய வந்தது. அப்போது லேசான சத்தம் கேட்பதும் தெரிந்தது. அதற்கு அவுட் கேட்டு இருந்தால் ப்ரித்வி ஷா அப்போதே ரன்கள் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறி இருப்பார். அதற்கு பின் அவர் 64 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Most lucky batsman in ipl is Prithvi Shaw
Didn't understand that why Dhoni & Chahar didn't appeal
If anyone appeal to Umpire he would be out for 0
Simple mistake can make csk to loose #CSKvDC #CSK #DCvsCSK #DC #IPL2020 #IPL #IPLinUAE pic.twitter.com/MamfwMQ7Og
— Asif (@DargaAsif) September 25, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் அனுபவம் மிகுந்த ஒரு கேப்டன் இப்படி செய்யலாமா? என ட்விட்டரில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். மேலும் பிரித்வி மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் புகழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக டிஆர்எஸ் கேட்பதிலும் தோனி சொதப்பி வருவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.