டெல்லியுடன் முட்டிமோதி... கேப்டனை 'வளைத்துப்போட்ட' கொல்கத்தா... எத்தனை 'கோடி'ன்னு பாருங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 19, 2019 04:30 PM

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட 8 அணிகளும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு வீரர்களை போட்டிபோட்டு தங்களது அணிகளுக்கு எடுத்து வருகின்றன.

IPL Auction 2020: KKR Bought Eoin Morgan for a whopping amount

இதில் சென்னை, ஹைதராபாத் அணிகள் இதுவரை எந்தவொரு வீரரையும் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுக்க முட்டிமோதி வருகின்றன.

அந்தவகையில் இங்கிலாந்து அணியின் கேப்டனும், உலகக்கோப்பை நாயகனுமான இயான் மோர்கனை கொல்கத்தா அணி 5.25 கோடிகள் கொட்டிக்கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் டெல்லி, கொல்கத்தா அணிகள் மோர்கனை வாங்கிட போட்டிபோட்டன. கடைசியில் 5.25 கோடிகள் கொடுத்து கொல்கத்தா அணி மோர்கனை ஏலத்தில் எடுத்துள்ளது.