அட என்னா தைரியம்! அரசு பஸ்ஸையே திருடி காயிலாங்கடையில் விற்ற சகோதரர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Apr 28, 2019 02:20 PM

ஹைதராபாத்தில் அரசுப் பேருந்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர்.

In Telangana the brothers steal and sold the govt bus in shop

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை கடந்த புதன்கிழமை (24/04/2019) நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மறுநாள் (25/04/2019) அன்று காலை அப்பேருந்தின் டிரைவர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த சிசிடிவி காட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாந்தேடு பகுதியை நோக்கி பேருந்தை திருடியவர்கள் பேருந்தை ஓட்டி சென்றுள்ளது அதில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து நாந்தேடு போலீசாரின் உதவியுடன் ஹைதராபாத் போலீசார் நடத்திய விசாரனைனையில், நாந்தேடில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பொக்கர் எனும் ஊரில் உள்ள காயலான் கடையில் பேருந்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அங்கு சென்ற போலீசார் பேருந்தின் பாகங்கள், பேருந்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஒரு ஆட்டோ, 13 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, பேருந்தை திருடி ஓட்டிச் சென்ற ஹைதாராபாத்தை சேர்ந்த சகோதரர்களான சையது அபேத், சையது ஜிகாத் ஆகியோரையும்,பொக்காரில் காயலான் கடை நடத்தும் அவர்களது உறவினர்களான முகமது நவீத், அப்சல் கனி மற்றும் காயலான் கடை ஊழியர்கள் நான்கு பேர் உட்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TELANGANA #GOVERNMENT BUS #STOLEN #SALE